சோயா எண்ணெய் முன்பேர தடை நீக்கம்

திங்கள், 1 டிசம்பர் 2008 (12:26 IST)
புதுடெல்லி: உருளைக் கிழங்கு, சோயா எண்ணெய், கொண்டக்கடலை, ரப்பர் ஆகியவைகளுக்கு முன்பேர சந்தையில் வர்த்தகம் நடத்த இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி உருளைக் கிழங்கு, சோயா எண்ணெய், கொண்டக்கடலை, ரப்பர் ஆகியவற்றிற்கு முன்பேர சந்தையில் (ஃப்யூச்சர்) வர்த்தகம் செய்வதற்கு முதலில் 4 மாதங்களுக்கு தடை விதித்தது.

பிறகு இந்த தடை நவம்பர் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது.

முன்பேர சந்தையை கட்டுப்படுத்தும் பார்வெர்ட் மார்க்கெட் கமிஷனிடம் இருந்து, இந்த நான்கு பொருட்களின் வர்த்தகத்திற்கு தடை நீடிக்கப்படுவதாக எவ்வித அறிவிப்பும் வரவில்லை. எனவே இதன் மீதான தடை நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்ததாக கருத வேண்டியதுள்ளது என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.

அதே நேரத்தில் கோதுமை, நெல், உளுந்து, துவரம் பருப்பு ஆகியவைகளுக்கான தடை நீடிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்