தொழிற்பேட்டை அமைக்க வேண்டுகோள்!

வெள்ளி, 31 அக்டோபர் 2008 (11:30 IST)
கரூர்: கரூர் அருகே கிருஷ்ணராயபுரத்தில் தொழிற் பேட்டை அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதிக்கு, காவிரி பாசன பகுதி விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் மகாதானபுரம் வி.ராஜராம் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.

சிறு தொழில் மேம்பாட்டு கழகத்தின் (சிட்கோ) சார்பாக கிருஷ்ணாரயபுரத்தில் தொழிற் பேட்டை அமைக்க வேண்டும். இந்த ஊர் கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அத்துடன் அகல ரயில் பாதையும் அருகில் உள்ளது. இது தொழிற்பேட்டை அமைக்க சிறந்து இடமாகும

அத்துடன் இந்த பகுதியில் வாழும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உண்டாக்கு தொழிற் பேட்டை அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரி வருகின்றோம் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்