பங்குச்சந்தையில் சரிவு: ப.சிதம்பரம் பதவி விலக பா.ஜ.க வலியுறுத்தல்!

சனி, 25 அக்டோபர் 2008 (05:30 IST)
இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதற்கு பொறுப்பேற்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியான பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, ஷார்ட் செல்லிங் எனப்படும் குறைந்த காலத்தில் பங்குகளை விற்பதால்தான் சந்தையில் கடும் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதாக வியாழனன்று ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரினார்.

இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவது தற்போதைய சூழலில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதுடன், செபி-யின் சார்பில் தவறான கருத்துகளை கூறுவதை ஏற்க முடியாது. ஷார்ட் செல்லிங் வணிகத்தால் பணம் ஈடுபவர்கள் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம் என யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்