அச்சு தொழில் நவீன தொழிற்பயிற்சி மையம்!

செவ்வாய், 14 அக்டோபர் 2008 (11:43 IST)
திருப்பூர்: திருப்பூர் பிரிண்டிங் தொழிலை உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்திடும் வல்லுநர்களை உருவாக்க ரூ.2 கோடியில் நவீன தொழிற்பயிற்சி மையம் ஆரம்பிக்கப்படும் என்று திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை பிரிண்டர்ஸ் சங்கம் (டெக்பா) அறிவித்துள்ளது.

இச் சங்கத்தின் 4-ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடை பெற்றது. இதற்கு சங்கத் தலைவர் டி.ஆர்.ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியை 2010 ஆம் ஆண்டுக்குள் ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு உதவிட திருப்பூர் ஸ்கீரின் பிரிண்டிங் தொழில்களில் நவீன தானியங்கி இயந்திரங்களை புகுத்தி, இத் தொழிலை உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்திட மத்திய, மாநில அரசுகள் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி (டஃப்) வழங்க வேண்டும்.

அத்துடன், ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலுக்கான வல்லுநர்களை உருவாக்க "டெக்பா' சார்பில், ரூ.2 கோடி மதிப்பில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவுகளுடன் கூடிய நவீன பிரிண்டிங் தொழில்நுட்பப் பயிற்சி மையம் உருவாக்கப்படும்.

இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை 30 விழுக்காடு முத்ல் 100 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. எனவ் அச்சு கட்டணத்தை 30 விழுக்காடு அதிகரித்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்