எஸ்.டி.சி. உளுந்து, கொண்டை கடலை விற்பனை!

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (13:28 IST)
மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் இறக்குமதி செய்த உளுந்து, கொண்டை கடலையை விற்பனை செய்கிறது.

மியான்மரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 2,960 டன் உளுந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 300 டன் கொண்டை கடலையை விற்பனை செய்ய போகிறது.

இதற்கான விலைப் புள்ளிகளை வருகின்ற 11 ஆம் தேதி வரை அனுப்பலாம்.

உள்நாட்டில் தேவையான அளவு சிறு தானியங்கள், பருப்பு வகைகளின் உற்பத்தி இல்லை. மொத்த தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே உள்ள பற்றாக்குறையை சமன் செய்ய மத்திய அரசின் நிறுவனங்களான எஸ்.டி.சி, எம்.எம்.டி.சி, நபீட் ஆகியவை அந்நிய நாடுகளில் இருந்து பருப்பு, சிறு தானியங்களை இறக்குமதி செய்கின்றன. இவை விலைப்புள்ளி அடிப்படையில் வர்த்தகர்களிடம் விற்பனை செய்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்