பணவீக்கம் 8.24 விழுக்காடக உயர்வு!

வெள்ளி, 6 ஜூன் 2008 (13:53 IST)
பணவீக்கம் மே 24 ஆ‌ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 8.24 விழுக்காடாக அதிகரித்தது. இதற்கு முந்தைய வாரத்தில் (மார்ச்17) 8.1 விழுக்காடாக இருந்தது.

சென்ற வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 5.15% ஆக இருந்தது.

மே 24 ஆ‌ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் அதிகரித்ததற்கு காரணம், இயற்கை ரப்ப‌ர், பருத்தி, கடலை பயறு ஆகியவற்றின் விலை 1 முதல் 2 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

இந்த வாரத்தில் மொத்த விலை குறியீட்டு எண் அளவு படி
நவதானியங்களினவிலை 0.5%, இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை 6% அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் பழம் மற்றும் காய்கறி விலை 1% குறைந்துள்ளது.

(முன்பு மார்ச் 29 ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 7.41% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டு அரசு அறிவித்தது. இது இறுதி கணக்கீட்டின் படி 7.75 விழுக்காடாக அதிகரித்துள்ளது).

மத்திய அரசு நேற்று முன்தினம் பெட்ரோல், டீசல், சமைய்ல் எரிவாயு விலை உயர்த்தியுள்ளது. இதனால் ஏற்படும் விலை உயர்வால் பணவீக்கம், அடுத்து வரும் வாரங்களில் பணவீக்கம் அதிகரிக்கும்.

ஆனால் இதன் தாக்கம் அதிகம் இருக்காது. ஏனெனில் ரயில்வே கட்டணத்தை அதிகரிப்பதில்லை என அறிவித்துள்ளது. பல மாநிலங்கள் டீசல் விலை உயராமல் இருக்க மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை வரியை குறைத்துள்ளன.

ஆந்திர மாநில அரசு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விதித்த மதிப்பு கூட்டு வரியை குறைத்துள்ளது. இதனால் ஆந்திராவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயராது.

டில்லி மாநில அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பினால் டில்லியில் சிலிண்டர் விலை ரூ.10 மட்டுமே அதிகரிக்குகம்.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பணவீக்கம் பிரச்சனையாக இருந்தாலும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் விலை உயராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதே போல் ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்