நிஃப்டி உயருமா?

புதன், 28 மே 2008 (10:20 IST)
தேசிய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கும் போது நிஃப்டி 10 முதல் 15 புள்ளிகள் வரை குறைந்திருக்கும். இன்று காலையில் நிஃப்டி 4835 முதல் 4840 வரை இருக்கும். பிறகு குறைந்து 4820-4800 என்ற அளவிற்கு குறைய வாய்ப்பு உள்ளது.

இது 4800 என்ற அளவில் நிலையாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ப்யூச்சர் மார்க்கெட் சந்தையில் மே மாத முன்பேரத்தின் வர்த்தகத்திற்கு வியாழக்கிழமை கடைசி நாள்.

ஆனால் நிஃப்டி குறைந்தால், இது 4770-4740 வரை குறைய வாய்ப்பு உள்ளது. நிஃப்டி 4880 க்கு மேல் அதிகரித்தால், அதற்கு பிறகு அதிக அளவு பங்குகளை வாங்குவதை பார்க்கலாம். இதனால் குறைந்த நேரத்திற்கு 4910-4940 வரை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. 4940 க்கும் மேல் அதிகரித்தால், பங்குகளை மும்முரமாக வாங்குவதில் ஆர்வம் காண்பிப்பார்கள்.

இன்று சம்பல் பெர்டிலைசர், ரிலையன்ஸ் கம்யூன்கேஷன்ஸ், டாடா மோட்டார்ஸ், கெயில் ஆகிய பங்குகளில் அதிக அளவு வர்த்தகம் நடக்கும்.

நேற்றைய கண்ணோட்டம்!

ஆசிய நாட்டு சந்தைகளில் சாதகமான நிலை இருந்ததால், நேற்று பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய போது, குறியீட்டு எண்கள் அதிகரித்தன. ஆனால் இந்த ஏற்றம் கடைசி வரை தொடரவில்லை. வங்கி, ரியல் எஸ்டேட், பெட்ரோலிய நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவு விற்பனை செய்தனர்.

இயந்திர உற்பத்தி, உலோக ஆலை நிறுவனங்களின் பங்குகளின் விலை சிறிது குறைந்தது. வங்கிகளின் பங்குகளின் விலை அதிக அளவு குறைந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளின் விலை சரிந்தது. தகவல் தொழில் நுட்பம், மருந்து உற்பத்தி நிறுவனங்கள்,வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 72 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,275 ஆக முடிந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 15 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4859 ஆக முடிந்தது. நிஃப்டி ப்யூச்சர் குறியீட்டு எண் 7 முதல் 10 புள்ளிகள் வரை குறைவாகவே இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் 15 புள்ளிகள் உயர்ந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்