பங்குச் சந்தைகளில் நாளை (வெள்ளிக் கிழமை) வர்த்தகம் தொடங்கும் போது, குறியீட்டு எண்கள் அதிகரித்து இருக்கும். தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 20 முதல் 35 புள்ளிகள் வரை அதிகரித்து இருக்கும். வர்த்தகம் தொடங்கும் போது நிஃப்டி 4949 முதல் 4955 என்ற அளவில் இருக்கும். இந்த நிலைக்கு குறையாமல் இருந்தால், மீண்டும் அதிகரித்து நிஃப்டி 5000 என்ற நிலையில் நாள் முழுவதும் இருக்கும்.
புதன், வியாழன் ஆகிய இரு தினங்களிலும் நமது பங்குச் சந்தைகள், மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளை சார்ந்தே இருந்தன என்பதில் சந்தேகம் இல்லை. அத்துடன் வெள்ளிக் கிழமை பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது, மற்ற நாட்டு நிலைமைகளை ஒத்தே இருக்கும். அதே நேரத்தில் புதன் கிழமை குறியீட்டு எண்கள் அதிகரித்ததை பார்க்கும் போது நிப்டி 4800 முதல் 4820 க்கும் குறையாது. தற்போது சிறிது காலத்திற்கு நிஃப்டி 4800 முதல் 5050 என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
புதன் கிழமையன்று நிஃப்டி 4920 க்கும் மேல் முடிந்திருப்பது முக்கியமான விஷயமாகும். பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கும் போக்கு அதிகரித்தால் நிஃப்டி 4955/4995/5015 என்ற அளவுகளிலும் 5015 க்கும் மேல் அதிகரிக்கும். குறைந்த நேரத்திற்கு 5050/5070 என்ற அளவில் உயரும்.
இதற்கு மாறாக நிஃப்டி 4875/4845/4810 என்று குறைந்து 4810 க்கும் கீழ் குறைந்தால், பங்குகளை அதிக அளவு விற்பனை செய்வதை காணலாம். இதனால் நிஃப்டி 4770/4740/4700 என்ற அளவிற்கு குறையும்.
அதிக கவனம் பெறும் பங்குகள். வெள்ளிக் கிழமையன்று எல்.ஐ.சி.ஹவுசிங்,ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ்,குஜராக் நீரி கோக்,ஹின்டால்கோ,கோடக் பாங்க்,ரிலையன்ஸ் பெட்ரோலியம் ஆகிய பங்குகள் அதிக அளவு விற்பனையாகும்.
புதன்கிழமை கண்ணோட்டம்.
புதன் கிழமையன்று பங்குச் சந்தையில் அதிக அளவு ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. ஆனால் இறுதியில் குறியீட்டு எண்கள் உயர்ந்தன. சென்செக்ஸ் 202 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16452 ஆகவும் நிஃப்டி 57 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4921 ஆக அதிகரித்தது. புதன் கிழமை மாலையில் ரிலையன்ஸ் இன்டஸ்டஸ்டிரிஸ் பங்கு விலை அதிகரித்தது, குறியீட்டு எண்கள் உயர காரணமாக இருந்தது. அதே நேரத்தில் பங்குச் சந்தையில் அதிக எண்ணிக்கையிலான பங்கு விலைகள் குறைந்து இருந்தன. தகவல் தொழில் நுட்பம்,உலோக உற்பத்தி,பெட்ரோலிய நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவு வாங்கினார்கள். ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சந்தையை ஒட்டியே நமது பங்குச் சந்தைகளும் இயங்கின.
சத்யம்,இன்போசியஸ்,விப்ரோ,மாருதி,ஹின்டால்கோ,ஓ.என்.ஜி.சி,ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், எல்.ஐ.சி ஹவுசிங், மெக்டவல், ஹெச்.டி.எப்.சி, குஜராத் நிரி கோக் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காண்பித்தனர்.பங்குச் சந்தையில் சுமார் ரூ.60,000 மதிப்பிற்கு பங்கு விற்பனை நடந்தது.