ஹைதராபாத்தை சேர்ந்த எஸ்.வி.இ.சி கன்ஸ்ட்ரக்சன் பங்குகளை வெளியிடுகிறது.
இந்த நிறுவனம் ரூ.10 முகமதிப்புள்ள 40 லட்சம் பங்குகளை வெளியிடுகிறது. ஒரு பங்கின் விலை ரூ.85 முதல் ரூ.95 வரை என நிர்ணயித்துள்ளது.
இந்த பங்கு வெளியீடு பற்றி இந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஸ்ரீமன நாராயணா கூறுகையில், இதற்கு பிப்ரவரி 4 ந் தேதி முதல் 8 ந் தேதி வரை விண்ணப்பி்க்கலாம். இந்த பங்குக்கு நிர்ணயித்துள்ள ரூ.85 விலையில் ரூ.34 முதலீடு திரட்ட முடியும். அதிக பட்ச விலையில் ரூ. 38 கோடி திரட்ட முடியும்.
எங்கள் நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளாக கட்டுமானத்துறையில் இயங்கி வருகிறது. கட்டிடங்கள்,.நீர்ப்பாசனம் போன்ற வேலைகளில் நீண்ட அனுபவம் உள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் முதலீட்டில் ரூ.15.32 கோடி இயந்திரங்கள், தளவாட சாமான்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளப்படும். நீண்ட கால செயல் முதலீட்டிற்காக ரூ.23.86 கோடி பயன்படுத்திக் கொள்ளப்படும்.
இப்போது வாடகை கொடுத்து பயன்படுத்தும் இயந்திரங்களுக்கு பதிலாக, புதிய இயந்திரங்களை வாங்குப்படும். எங்கள் நிறுவனத்திடம் நவம்பர் 30 ந் தேதி நிலவரப்படி ரூ.521.91 கோடி மதிப்புள்ள கட்டு்மான வேலைகள் உள்ளன.
இவற்றில் பெரும்பாலனவை ஆந்திரா மற்றும் மத்திய பிரதேச அரசுகளின் நீர்ப்பாசன துறை வேலைகளே. இத்துடன் தமிழ்நாட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுதல், ஹரியானாவில் குர்கான், பஞ்சுலா ஆகிய நகரங்களில் ராணுவ நல வாரியத்திற்காக குடியிருப்புக்கள் கட்டுதல், விசாகப்பட்டினத்தில் குடியிருப்பு, ஹைதராபாத்தில் வணிக வளாகம் கட்டுதல் ஆகிய பணிகள் என்று கூறினார்.