இந்தியாவில் முன்னமி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ லிமிடெட், அதன் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பங்குகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இதன் படி ரூ.2 முகமதிப்புள்ள 38,510 பங்குகள் விப்ரோ எம்ப்ளாயி ஸ்டாக் ஆப்சன் திட்டத்தின் (விஸ்போ) படி தகுதி உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
இந்த பங்குகள், விஸ்போ-2000, ரெஸ்டிரிக்டட் ஸ்டாக் யூனிட் திட்டம்-2004 படி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இத்துடன் விப்ரோ நிறுவனம் ரூ.2 முகமதிப்புள்ள 31 ஆயிரத்து 200 பங்குகளை ஜே.பி.மார்கன் சேஸ் பாங்கிற்கு வழங்குகிறது. இந்த நிறுவனம் அமெரிக்காவில் அமெரிக்க டிபாசிட்டரி ரிசிப்ட் என்ற பத்திரங்களை வெளியிட்டு முதலீடு திரட்டியது. இந்த பத்திரங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு வழங்குவதற்காக, தற்போது ஜே.பி.மார்கன் சேஸ் பாங்கிற்கு பங்குகள் ஒதுக்கப்படுகின்றன.