பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை!

செவ்வாய், 18 டிசம்பர் 2007 (17:14 IST)
பங்குகளில் முதலீடு செய்பவர்கள் எச்சரிக்கையாக முதலீடு செய்ய வேண்டும் என்று தேசிய பங்குச் சந்தை எச்சரித்துள்ளது.

தேசிய பங்குச் சந்தையி்ன் நிஃப்டி குறியீட்டு எண் இதற்கு முன்பு எப்போதுமே இல்லாத வகையில் நேற்று 270.70 சரிந்தது. இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 769 புள்ளிகள் குறைந்தன. இவை கடந்த இருபது ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவு, ஒரே நாளில் ஏற்பட்ட சரிவாகும்.

இதே போல் இன்றும் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 164 புள்ளிகள் ஏற்ற இறக்கமாக இருக்கின்றது. இதே போல் சென்செக்ஸ் 300 புள்ளிகள் ஏற்ற இறக்கமாக இருக்கின்றது. இது குறைந்த பட்ச விலைக்கும் அதிக பட்ச விலைக்கும் 20 மடங்கு வித்தியாசம். இதன் மூலம் பங்குகளின் விலைகள் எவ்வித அடிப்படையும இல்லாமல் அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பது தெளிவாகின்றது.

இந்த சூழ்நிலையில் தேசிய பங்குச் சந்தை முதலீட்டாளர்களை எச்சரித்திருப்பது முக்கியத்துவமாக கருதப்படுகி்ன்றது. இந்த எச்சரிக்கை பகிரங்கமாக பத்திரிக்கை விளம்பரமாக வெளியிடுப்பட்டுள்ளது.

இதில் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன்பு, அந்த நிறுவனத்தை பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டும். அந்த பங்கு விற்பனை செய்யும் விலை நியாயமானதா, அதிகரிக்குமா, குறையுமா என்பதை பகுப்பாய்வு செய்து முதலீடு செய்ய வேண்டும். எங்கள் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக இலாபம் கிடைக்கும் என்பன போன்ற விளம்பரங்களை நம்பாதீர்கள். அதே போல் வதந்திகளையும் நம்பி முதலீடு செய்யாதீர்களஎன விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன் விலை ஏற்ற இறக்க விபரங்கள், நிதி நிலைமை, பங்குகளை வைத்திருப்பவர்களின் விபரங்கள் ஆகியவற்றை பரிசீல்க்க வேண்டும். ஒரு சில பங்குகளின் விலைகள் எவ்வித அடிப்படையும் இல்லாமலே அதிக அளவு விலை அதிகரிப்பதை தேசிய பங்குச் சந்தை சுட்டிக்காட்டியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்