பிர்லா சன் லைப் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் "பிர்லா சன் லைப் ஸ்பெஷல் சிட்சுவேஷன் பண்ட்" என்ற பெயரில் புதிய பரஸ்பர நிதி யூனிட்டுகளை வெளியிட்டுள்ளது.
இந்த யூனிட்டுகளில் டிசம்பர் 17 ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15 ந் தேதி வரை முதலீடு செய்யலாம். குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டும். ஒரு யூனிட்டின் விலை ரூ.10.
இந்த புதிய யூனிட்டுகளை பற்றி பிர்லா சன் லைப் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் முகில் குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த யூனிட்டுகளின் மூலம் திரட்டப்படும் நிதியில் 80 விழுக்காடு பங்குச் சந்தையிலும், 20 விழுக்காடு கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். இதன் நோக்கம் நீண்ட கால நோக்கில் வருவாயை தரும் பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்வதே. இந்த நிதி குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் வளர்ச்சி அடையும் துறையின் பங்களில் முதலீடு செய்யப்படும் என்று கூறினார்.