பரஸ்பர நிறுவனங்களின் முன்னணியில் உள்ள யூ.டி.ஐ. மியூச்சுவல் பண்ட் நிறுவனமும் சிட்டி பாங்கும் மியூச்சுவல் பண்ட் யூனிட்டுகளை விநியோகிக்கும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
இதன் படி யூ.டி.ஐ. வெளியிடும் பரஸ்பர நிதி யூனி்ட்டுகளை சிட்டி பாங்க் விநியோகிக்கும். இது இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள அதிக வருவாய் உள்ள வாடிக்கையாளர்களிடம் யூ.டி.ஐ. யின் யூனிட்டுகள் விநியோகம் செய்ய வசதியாக இருக்கும் என்று யூ.டி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.