யூ.டி.ஐ உள்கட்டமைப்பு யூனிட் வெளியீடு!

Webdunia

சனி, 17 நவம்பர் 2007 (18:25 IST)
யூ.டி.ஐ பரஸ்பர நிதி நிறுவனம் புதிதாக யூ.டி.ஐ-இன்பிராக்சர் அட்வான்டேஜ்ட் பண்ட் 1 என்ற பெயரில் யூனிட்டுகளை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த யூனிட்டுகளில் டிசம்பர் 19ஆ‌ம் தேதி வரை முதலீடு செய்யலாம்.

இந்த திட்டம் பற்றி யூ.டி.ஐ நிதி மேலாளர் கதவுதம் தேசாய் செய்தியாளர்களிடம் கூறுகை‌யி‌ல், இந்த திட்டத்தின் மூலம் திரட்டப்படும் முதலீடு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நிறுவனங்களில் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்படும்.

இந்த முதலீடு கட்டுமான நிறுவனங்கள், மின் உற்பத்தி, பெட்ரோலிய நிறுவனங்கள், உலோகம், தகவல் தொடர்பு, போக்குவரத்து விமான நிலையங்கள் ஆகியவற்றின் பங்குகளில் முதலீடு செய்யப்படும்.

இந்த யூனிட்டுகளில் குறைந்த பட்சம் ரூ.5,000 முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச உச்சவரம்பு இல்லை. இந்த திட்டம் மூன்று வருட காலவரம்பிற்கு உட்பட்டது.

இதில் முதலீடு செய்யும் கடைசி தேதியில் இருந்து ( டிசம்பர் ) ஆறு மாதத்திற்கு பின், அன்றைய மதிப்பில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்று யூ.டி.ஐ நிதி மேலாளர் கதவுதம் தேசாய் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்