டாலர் மதிப்பு குறைந்தது

Webdunia

செவ்வாய், 23 அக்டோபர் 2007 (15:49 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் 1 டாலர் ரூ. 39.81/ 82 என்ற அளவில் தொடங்கியது. ( ( (நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 39.88/ 89). காலையில் வர்த்தகம் தொடங்கிய பிறகு ஒரு நிலையில் டாலர் ரூ. 39.67 விலையில் விற்பனையானது. 12 மணியளவில் டாலரின் மதிப்பு சிறிது அத்கரித்து 1 டாலர் ரூ. 39.71/ 72 என்று விற்பனையானது.

பங்குச் சந்தையில் அந்நிய மூதலீட்டு நிறுவனங்கல் மீண்டும் முதலீடு செய்ய தொடங்கின. இதன் காரணமாக டாலர் வரத்து அதிகரித்தது. இதுவே டாலர் மதிப்பு குறைய காரணம். அத்துடன் அத்துடன் பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை வாங்காததும் டாலர் மதிப்பு குறைந்ததற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்