வீட்டு கடன் வட்டி குறைப்பு - ஐ.டி.பி.ஜ!

Webdunia

புதன், 19 செப்டம்பர் 2007 (13:14 IST)
வீட்டுக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை ஐ.டி.பி.ஐ. வங்கி குறைத்துள்ளது!

இதன் படி, புதிய வீடு கட்டுவற்கு, வாங்குவதற்கு, பழைய வீடு புதுப்பிப்பதற்காக வழங்கப்படும் வட்டி 1 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.

மூன்று வருடங்களில் திருப்பிச் செலுத்தும் கடனுக்கான வட்டி 12.5 விழுக்காடு வசூலிக்கப்படும். இதற்கு முன்பு 13.5 முதல் 14 விழுக்காடு வரை வட்டி வசூலிக்கப்பட்டது.

ஐந்து வருடங்களில் திருப்பிச் செலுத்தும் கடனுக்கான வட்டி 12.75 விழுக்காடு வசூலிக்கப்படும். மாறும் வட்டி (floating interest rate) விகிதம் முன்பு இருந்தது போல் 11.25 விழுக்காடாகவே தொடரும்.

ஐ.டி.பி.ஐ வங்கி வைப்பு நிதிக்கு வழங்கும் வட்டி விகிதத்தை அரை சதவிகிதம் உயர்த்தி உள்ளது. இதன் படி ரூ 15 இலட்சம் வரை 9 மாதம் முதல் 1 வருடம் வரைக்கான வட்டி 7.25 விழுக்காட்டில் இருந்து 7.75 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. 12 மாதத்தில் இருந்து 18 மாதம் வரைக்கான வைப்பு நிதி வட்டி விகிதம் 8 விழுக்காட்டில் இருந்து 8.5 விழுக்காடாக உயர்த்தி உள்ளது.

பாங்க ஆப் பரோடா வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை சென்ற மாதம் அரை விழுக்காடு குறைத்து.
கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டு கடனுக்கான வட்டியை எல்லா வங்கிகளும் உயர்த்தின. இது கட்டுமானத் தொழிலையும். ரியல் எஸ்டேட் தொழிலையும் பாதிக்கும் என பல்வேறு தரப்பில் இருந்து அச்சம் தெரிவிக்கப்பட்டது. இத்துடன் குறிப்பாக தமிழகத்தில் வழிகாட்டு விலை உயர்வால் பத்திர பதிவு கட்டணமும் உயர்ந்தது.

சிமென்ட், மணல், செங்கல், இரும்புக் கம்பி போன்ற கட்டுமானத்திற்கு அவசியமான பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கட்டுமானத் தொழிலின் எதிர்காலம் குறித்து அச்சம் தெரிவிக்கப்பட்டது. இந்த தொழிலின் வளர்ச்சி பாதிக்கப்பட்டால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்றும் கூறப்பட்டது.

சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து சிமெண்ட் இறக்குமதி செய்து கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதன் படி தமிழகத்தில் அடுத்த இரண்டு மாதங்களில் 15 டன் சிமெண்ட் இறக்குமதி ஆக உள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிமெண்ட் சந்தையில் விற்பனைக்கு வரும் போது, உள்நாட்டு தயாரிப்பு சிமெண்ட் விலையும் குறையும் என ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்