ஆசியப் பங்குச் சந்தைகளில் இன்று இந்தியப் பங்குச் சந்தை மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. சுமார் 389 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் குறியீடு முடிவில் 16,488.24 புள்ளிகளில் நிறைவுற்றது.
தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடும் 119 புள்ளிகள் பின்னடைவு கண்டு 4,943.65 புள்ளிகளாக நிறைவுடைந்தது.
இந்தச் சரிவுக்கான காரணங்களை அறுதியிடமுடியவில்லை என்று சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொறியியல் நிறுவன்மான எல்&டி பங்குகள் சுமார் 5.5% சரிவு கண்டது. பி.எச்.இ.எல். பங்குகளும் 5% சரிவு கண்டுள்ளது.
ரிலையன்ஸ், எல் அன்ட் டி, ஐ.டி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., மற்றும் எஸ்.பி.ஐ. பங்குகளின் சரிவு இன்றைய பங்குச் சந்தை சரிவில் பாதிக்கும் மேல் பங்களிப்பு செய்துள்ளது.