சென்செக்ஸ் 567 புள்ளிகள் உயர்வு

திங்கள், 29 ஆகஸ்ட் 2011 (16:48 IST)
கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு மும்பைப்பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 567.50 புள்ளிகள் அதிகரித்து 16,416.33 புள்ளிகளாக அதிகரித்து நிறைவுற்றது.

இதற்கு முன்பு ஜூன் 24ஆம் தேதி 513 புள்ளிகள் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 171.80 புள்ளிகள் அதிகரித்து 4,919.60 புள்ளிகளாக நிறைவுற்றது.

தகவல்தொழில்நுட்ப நிறுவனம், வங்கிகள், மற்றும் உலோகத்துறைப் பங்குகள் அதிக அளவில் லாபம் கண்டதால் இந்த ஏற்றம் சாத்தியமாயின.

வெப்துனியாவைப் படிக்கவும்