சென்செக்ஸ் 328 புள்ளிகள் சரிவு

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2011 (17:02 IST)
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இன்று 328 புள்ளிகள் சரிந்து 16,142 புள்ளிகளுடன் நிறைவுற்றது.

இந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 698 புள்ளிகள் சரிவு கண்டுள்ளது. மேலும் இன்று முதன் முதலாக மே 2010ற்குப் பிறகு மதிய வர்த்தகத்தில் 16,000 புள்ளிகளுக்கும் குறைவாக வீழ்ந்தது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி 99 புள்ளிகள் சரிந்து 4,845 புள்ளிகளாக நிறைவுற்றது.

இன்ஃபோசிஸ் பங்குகள் 6% சரிவு காண ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பங்குகள் சுமார் 3.7% சரிவு கண்டன. எல்&டி நிறுவனத்தின் பங்குகள் 5% சரிந்தது. ஐ.டி.சி. 2.2% சரிவு கண்டது. இந்தச் சரிவுகளினால் இன்று சென்செக்ஸ் 210 புள்ளிகள் அளவுக்கு குறைந்தது.

பி.எஸ்.இ.யின் ஐ.டி. பங்குகள் குறியீடு இன்று 4.4% சரிவு கண்டது. மிட்கேப் குறியீட்டிலும் ஐ.டி. நிறுவனங்கள் சரிவைக் கண்டன. பாட்னி கம்ப்யூட்டர்ச் பங்குகள் 4.1% சரிவையும், டெக் மஹிந்ரா மற்றும் ஆரக்கிள் ஃபைனான்ச் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்