சென்செக்ஸ் 15 புள்ளிகள் சரிவுடன் நிறைவு

செவ்வாய், 5 ஏப்ரல் 2011 (16:45 IST)
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று வர்த்தகம் முடிவடையும் போது 14.91 புள்ளிகள் குறைந்து 19,686.32 புள்ளிகளாக நிறைவுற்றது.

ஆனால் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 1.60 புள்ளிகள் அதிகரித்து 5,910.05ஆக நிறைவடைந்தது.

இன்று காலை துவக்கத்தில் 68 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ் அதன் பிறகு ஏற்றமும் இறக்கமுமாகச் சென்றது.

மும்பைப் பங்குச் சந்தையின் மிட்கேப் 55 புள்ளிகள் அதிகரித்து 7,155 புள்ளிகளுடன் நிறைவுற்றது.

ஸ்மால் கேப் 118 புள்ளிகள் அதிகரித்து 8,712. 92 புள்ளிகளுடன் நிறைவுர்ற்றது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி ஜூனியர் 129.20 புள்ளிகள் அதிகரித்து 11,624.80 புள்ளிகளாக நிறைவுற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்