சென்செக்ஸ் 143 புள்ளிகள் உயர்வு

வியாழன், 2 டிசம்பர் 2010 (16:58 IST)
மும்பைப் பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று 143 புள்ளிகள் அதிகரித்து முடிவில் 19,992.70 புள்ளிகளாக நிறைவுற்றது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீட்டெண் சுமார் 51 புள்ளிகள் அதிகரித்து முடிவில் 6,011.70 புள்ளிகளாக நிறைவுற்றது.

காலையில் உயர்வுடன் துவங்கி நண்பகல் வாக்கில் 230 புள்ளிகளுக்கும் மேல் சென்ற சென்செக்ஸ் அதன் பிறகு சற்றே பின்னடைவு கண்டது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, விப்ரோ, டி.சி.எஸ்,. டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகியவற்றின் பங்குகள் ஏற்றம் கண்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்