மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு நண்பகல் வர்த்தகத்தில் 537 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து 19,420.25 புள்ளிகளாக நண்பகல் 1 மணியளவில் சரிந்துள்ளது.
தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 180.75 புள்ளிகள் சரிந்து 5,820.25 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.
2ஜி அலைக்கற்றை ஊழல் புகார்களினால் எழுந்துள்ள அரசியல் பதற்றம் காரணமாக சென்செக்ஸ் குறைந்ததாக சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தென்கொரியா, வடகொரியா எல்லைப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் ஐரோப்பிய, ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன, இதன் எதிரொலியும் இன்றைய இந்திய பங்fகுச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.