மும்பை: பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
காலை 1010 மணியளவில் சென்செக்ஸ் 70.78, நிஃப்டி 16.50 புள்ளிகள் அதிகரித்தது.
இரண்டு பங்குச் சந்தைகளில் காலையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தாலும், இன்று நாள் முழுவதும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.
ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இன்று சாதகமான நிலை இருந்தது.
ஹாங்காங்கின் ஹாங்செங் 156.79, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 1.36, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 23.28, ஜப்பானின் நிக்கி 112.39 புள்ளிகள் அதிகரித்தது. சீனாவின் சாங்காய் காம்போசிட் மட்டும் 2.54 புள்ளிகள் குறைந்து இருந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன் 31.62, எஸ் அண்ட் பி 500-3.38, நாஸ்டாக் 19.92 புள்ளிகள் குறைந்தது.
ஐரோப்பிய நாடுகளில் நேற்று சில நாடுகளின் பங்குச் சந்தையில் குறியீட்டு எண் அதிகரித்தது. சிலவற்றில் குறைந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-102.76 புள்ளிகள் அதிகரித்தது.
காலை 10.30 மணியளவில் நிஃப்டி 23.90 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 2,946.10 ஆக உயர்நதது. இதே போல் சென்செக்ஸ் 102.22 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,636.74 ஆக அதிகரித்தது.
மிட் கேப் 43.45, பி.எஸ்.இ. 500- 38.83, சுமால் கேப் 35.72 புள்ளிகள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.34 மணியளவில் 999 பங்குகளின் விலை அதிகரித்தும், 454 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 44 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.4.42 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
அதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ரூ.243.21 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.