ஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 108 புள்ளிகள் உயர்வு

வெள்ளி, 26 டிசம்பர் 2008 (11:06 IST)
கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின்னர் இன்று துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் சிறிய ஏற்றத்துடன் துவங்கியுள்ளன.

இன்று காலை 10.45 மணியளவில் மும்பை பங்குச்சந்தை- சென்செக்ஸ் குறியீடு 112 புள்ளிகள் உயர்ந்து 9,681 ஆக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை- நிஃப்டி குறியீடு 34 புள்ளிகள் அதிகரித்து 2,950 ஆக காணப்பட்டது.

இந்த வாரத்தின் முதல் 3 நாட்களில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த மும்பை, தேசிய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் துவங்கியுள்ளதால், முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், தரகர்கள் ஓரளவு நிம்மதியடைந்துள்ளனர்.

காலை நிலவரப்படி ரிலையன்ஸ் பெட்ரோலியம், ஜெட் ஏர்வேஸ், ரிலையன்ஸ் நேச்சுரல், இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் ஆகிய நிறுவனங்கள் 5 முதல் 10 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளன.

எனினும், யுனைடட் பாஸ்பரஸ், விப்ரோ, இன்போசிஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் சிறிய சரிவைச் சந்தித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்