ரூபாய் மதிப்பு 30 பைசா சரிவு

செவ்வாய், 23 டிசம்பர் 2008 (11:22 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 பைசா குறைந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.33 ஆக அதிகரித்தது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 30 பைசா உயர்வு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.02-48.03 பைசா.

பொதுத்துறை வங்கிகளும், இறக்குமதியாளர்களும் அதிக அளவு டாலரை வாங்கின்றனர். அத்துடன் இன்றும் ஆசிய நாட்டு அந்நியச் செலவாணிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்தது. அத்துடன் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. இதனால் டாலரின் மதிப்பு அதிகரித்து, ரூபாயின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. நேற்று மட்டும் ரூபாயின் மதிப்பு 76 பைசா குறைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்