மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65 அதிகரித்தது.
இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.120 அதிகரித்தது.
இந்திய சந்தை போலவே, லண்டன் சந்தையிலும் தங்கம் வெள்ளியின் விலை உயர்ந்தது.
டாலருக்கு நிகரான மற்ற அந்நிய செலவாணி மதிப்பு அதிகரிக்கின்றன. பெட்ரோலிய கச்சா எண்ணெய், தாமிரம், அலுமினியம் போன்ற உலோகங்களின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கம், வெள்ளி உலோக சந்தையில் திரும்பியுள்ளது. இதுவே இவற்றின் விலை உயர்வுக்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 836.00/836.50 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 828.00/828.50).
பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 10.63/10.64 டாலராக உயர்ந்தது. (நேற்றைய விலை 10.42/10.43)
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,030 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,970 பார் வெள்ளி கிலோ ரூ.17,455.