சென்செக்ஸ் குறியீடு 66 புள்ளிகள் உயர்வு!

வெள்ளி, 28 நவம்பர் 2008 (16:26 IST)
மும்பையில் ஒருபுறம் பயங்கரவாதிகளுக்கு எதிராக கமாண்டோ படையினர் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் நிலையிலும், ஏற்ற இறக்கத்துடன் நிலவிய மும்பை பங்குச் சந்தை குறியீடு வர்த்தகம் முடிவடைந்த போது 66 புள்ளிகள் உயர்வுடன் இருந்தது.

மாலையில் சந்தை முடிவடைந்த போது சென்செக்ஸ் குறியீடு 9.,092.72 ஆக இருந்தது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் 3.7 விழுக்காடு உயர்வை எதிர்கொண்டன. ஆட்டோ மொபைல் நிறுவனப் பங்குகள் 1.4 விழுக்காடு உயர்ந்து காணப்பட்டன.

ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர், எல் அண்ட் டி பங்குகள் தலா 3 விழுக்காடு சரிவை எதிர்கொண்டன. கிராஸிம், என்டிபிசி நிறுவனங்களின் பங்குகளும் சரிவையே சந்தித்தன.

நிஃப்டி - தேசியப் பங்குச் சந்தை குறியீடு 3 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 2,755.10 ஆக முடிவடைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்