டாலர் மதிப்பு 26 பைசா உயர்வு!

செவ்வாய், 18 நவம்பர் 2008 (12:13 IST)
மும்பை: அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 பைசா சரிந்தது.

வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் விலை ரூ.49.60 பைசா என்ற அளவில் இருந்தது.

இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 26 பைசா குறைவு.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.49.34.

அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் ரூ. 49.54 முதல் ரூ.49.80 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

நேற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 பைசா குறைந்தது. இன்று காலையில் 26 பைசா குறைந்துள்ளது.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போதி, பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்தித்தது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்யும். அத்துடன் எண்ணெய் நிறுவனங்கள், இறக்குமதியாளர்களும் டாலரை வாங்குகின்றனர். இதனால் டாலரின் தேவை அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டே டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்