பங்குச் சந்தைகளில் இன்றும் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.
இன்று காலை பங்குச் சந்தைகளில் 10.05 மணியளவில் நிஃப்டி 09.50, சென்செக்ஸ் 165.15 புள்ளிகள் குறைந்தன.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஜீ-20 நாடுகள் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு பல ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஜப்பானின் பொருளாதாரமும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. ஜூலை-செப்டம்பர் மூன்று மாதத்தில் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி 0.4% ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய மூன்று மாதத்தில் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக இருந்தது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. இந்த நாட்டு வங்கி, நிதி நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளன. மற்ற துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளது தற்போது இந்த அணியில் ஜப்பானும் சேர்ந்து கொண்டுள்ளது.
அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை 56 டாலராக குறைந்துள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை குறியீட்டு எண்கள் குறைந்தன. டோவ் ஜோன்ஸ் 337.94, நாஸ்டாக் 79.85, எஸ் அண்ட் பி 500-38.00 புள்ளிகள் அதிகரித்தன.
ஆனால் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் பெல்ஜியம் தவிர தவிர மற்றவைகளில் குறீயீட்டு எண்கள் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-63.76 புள்ளிகள் அதிகரித்தது.
காலை 10.31 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 20.75 (1.06%) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 2780.60 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 165.15 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 9,220.27 ஆக குறைந்தது.
இதே போல் மிட் கேப் 51.41, சுமால் கேப் 41.42, பி.எஸ்.இ. 500- 60.08 புள்ளிகள் குறைந்தன.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் இன்று சிலவற்றில் குறியீட்டு எண்கள் குறைந்தும், சிலவற்றில் அதிகரித்தும் இருந்தன. ஹாங்காங்கின் ஹாங்செங் 56.18, ஜப்பானின் நிக்கி 200.30, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 6.18, சீனாவின் சாங்காய் காம்போசிட் 8.47 புள்ளிகள் அதிகரித்தன.
சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 5.23 குறைந்து இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.39 மணியளவில் 436 பங்குகளின் விலை அதிகரித்தும், 1215 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 59 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை ரூ. 811.52 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ரூ.25.15 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.