பங்குச் சந்தைகளில் உயர்வு!

வெள்ளி, 31 அக்டோபர் 2008 (10:31 IST)
மும்பை:பங்குச் சந்தைகளில் இன்றும் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

இன்று காலை பங்குச் சந்தைகளில் 10.05 மணியளவில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. நிஃப்டி 176.15, சென்செக்ஸ் 647.10 புள்ளிகள் அதிகரித்தது.

தீபாவளி பண்டிகை, புது வருட கணக்கு துவக்கியதற்கு பிறகு, முதன் நாளாக இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் துவங்கியுள்ளது.

அமெரிக்க ரிசர்வ் வங்கி நேற்றுவட்டி விகிதத்தை 1 விழுக்காடு குறைத்தது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று முன்னேற்றம் காணப்பட்டது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 189.73, எஸ் அண்ட் பி 500-24.00, நாஸ்டாக் 41.31 புள்ளிகள் உயர்ந்தது.

ஐரோப்பிய நாடுகளில் நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து தவிர மற்ற பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-49.11 புள்ளிகள் அதிகரித்தது.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 65 டாலருக்கும் குறைந்தது. அமெரிக்க முன்பேர சந்தையில் ஆசிய நாட்டுக்கான கச்சா எண்ணெய், டிசம்பர் மாதத்திற்கு 1 பீப்பாய் 64.52 டாலராக குறைந்தது.

கச்சா எண்ணெய் விலை சென்ற ஜூலை மாதத்தில் பீப்பாய் 147 டாலராக இருந்தது. இந்த விலையுடன் ஒப்பிடுகையில், தற்போது 55 விழுக்காடு குறைந்துள்ளது.

அதே நேரத்தில் இந்திய ரூபாய்க்கான டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதன் பலன்கள் முழு அளவில் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை.

காலை 10.26 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 195.90 (7.61%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2892.95 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 720.33 புள்ளிகள் அதிகரித்து.

இதே போல் மிட் கேப் 87.70, சுமால் கேப் 92.52, பி.எஸ்.இ. 500- 207.66 புள்ளிகள் அதிகரித்தன.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில், சிலவற்றில் சாதகமாகவும், மற்றவைகளில் பாதகமாகவும் இருந்தது.

இன்று காலை ஹாங்காங்கினஹாங்செங் 213.10, ஜப்பானின் நிக்கி 125.12, சீனாவின் சாங்காய் காம்போசிட் 27.50 புள்ளிகள் குறைந்தன.

சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 22.85, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 45.87 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.12 மணியளவில் 988 பங்குகளின் விலை அதிகரித்தும், 316 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 33 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் புதன் கிழமை 1,306.35 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 739.66 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்