பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.
காலை 10 மணியளவில் நிஃப்டி 62, சென்செக்ஸ் 259 புள்ளிகள் சரிந்தன.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 231.77, நாஸ்டாக் 73.55 புள்ளிகள் குறைந்தன.
இதே போல் ஐரோப்பிய நாடுகளி ல் ஆஸ்திரியா, பிரான்ஸ் தவிர மற்ற நாட்டு சந்தைகள் சரிவையே சந்தித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-52.94 புள்ளிகள் குறைந்தது.
பொருளாதார நெருக்கடி காரணமாக, நுகர்வோரின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. இதனால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இதன் பிரதிபலிப்பு பண்டக சந்தையிலும் எதிரொலிக்கிறது. நிக்கல், உருக்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய் உட்பட பல்வேறு பொருட்களின் விலை குறைந்து வருகிறது.
காலை 10.35 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 85.30 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3149.60 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 259.32 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 10,424.07 ஆக குறைந்தது.
இதே போல் மிட் கேப் 33.50, சுமால் கேப் 37.60, பி.எஸ்.இ. 500- 79.04 புள்ளிகள் குறைந்தன.
இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. ஹாங்காங்கின் ஹாங்செங் 430.68, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 68.73, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 62.72, ஜப்பானின் நிக்கி 524.49, சீனாவின் சாங்காய் காம்போசிட் 41.45 புள்ளிகள் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.46 மணியளவில் 583 பங்குகளின் விலை அதிகரித்தும், 1170 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 74 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று 258.42 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள்883.76 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
இன்று பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் தொடர்ந்து குறைந்து வருகின்றன.