சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 200 ரூபாய் குறைந்து ரூ.9,296 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு 340 ரூபாய் குறைந்துள்ளது.
கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிகரித்த நிலையில், நேற்று தங்கள் விலை பவுனுக்கு 344 ரூபாய் குறைந்தது. இன்று மேலும் திடீர் திருப்பமாக தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,545 (நேற்று ரூ.12,805) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,296 (ரூ.9,496) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,162 (ரூ.1,187)
வெள்ளி (பார்) கிலோ ரூ.17,310 (ரூ.17,650) வெள்ளி 10 கிராம் ரூ.185 (ரூ.189) வெள்ளி 1 கிராம் ரூ.18.5 (ரூ.18.9)