மும்பை:வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 37 பைசா அதிகரித்தது.
அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் 1 டாலரின் மதிப்பு ரூ. 48.46/48.47 என்ற அளவில் இருந்தது.
கடந்த இரண்டு நாட்களாக டாலரின் மதிப்பு குறைந்து, ரூபாய் மதிப்பு அதிகரித்தது. இதனால் இன்று காலை அந்நிய வங்கிகள் அதிக அளவு முன்பேர சந்தையில் டாலர் வாங்கியதால், டாலரின் மதிப்பு அதிகரித்து ரூபாயின் மதிப்பு குறைந்தாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பிறகு வர்த்தகம நடக்கும் போது, 1 டாலரின் மதிப்பு ரூ. 48.38/48.47 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 29 குறைவு.
ஆனால் இதே நிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் தொடர்ந்து குறைந்தது. இதனால் டாலரின் மதிப்பு ரூ.48.46
நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 48.46/48.47 ஆக அதிகரித்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 37 பைசா அதிகம்.