அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 33 பைசா சரிந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தை கடந்த வெள்ளியன்று நிறைவடையும் போது ரூ.47.07/08 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் 33 பைசா சரிந்து ரூ.47.40/42 ஆக காணப்பட்டது.
நண்பகல் நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.47.27ல் இருந்து ரூ.47.48க்கு இடைப்பட்ட மதிப்பில் காணப்பட்டது.
கடந்த ஏப்ரல் 2003ஆம் ஆண்டுக்கு பின்னர் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் சரிந்துள்ளது இதுவே முதல்முறை. சர்வதேச அளவில் காணப்படும் நிதிநெருக்கடியே இதற்கு காரணம் என வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.