அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 56 பைசா சரிந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தை கடந்த புதனன்று நிறைவடையும் போது ரூ.46.62/63 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் ரூ.47.18 ஆக சரிந்தது.
இன்று நண்பகல் நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.46.84ல் இருந்து ரூ.47.30 ஆக காணப்பட்டது.