பங்குச் சந்தைகளின் முன்பேர வர்த்தகத்தில் இன்று கணக்கு முடிக்கும் நாள். அத்துடன் மாலை பணவீக்கம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.
பணவீக்கம் 12.23 விழுக்காடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 12.14 விழுக்காடாக இருந்தது)
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போlது, அதிகரித்த குறியீட்டு எண்கள், அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே குறைய ஆரம்பித்தன.
காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 39.85 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4121.40 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 66.97 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 13,625.55 ஆக குறைந்தது.
இதே போல் மிட் கேப் 6.59, சுமால் கேப் 5.38, பி.எஸ்.இ. 500- 18.77 புள்ளிகள் குறைந்தன.
நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் டோவ்ஜோன்ஸ் 29, எஸ் அண்ட் பி 500- 2.35 புள்ளிகள் குறைந்தது. ஆனால் நாஸ்டாக் 02.35 புள்ளிகள் அதிகரித்தது.
இதே போல் ஐரோப்பாவில் எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ-100-40.55 புள்ளி குறைந்தது.
இன்று ஆசிய பங்குச் சந்தைகளிலும் இருவிதமான நிலை இருந்தது.
ஹாங்காங்கின் ஹாங்செங் 111.03, சீனாவின் சாங்காய் 180 பிரிவு 249.71 புள்ளிகள் அதிகரித்தது.
சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 23.34, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 02.13, புள்ளிகள் குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.58 மணியளவில் 812 பங்குகளின் விலை அதிகரித்தும், 1076 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 73 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
நேற்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 494.40 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 170.18 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
இன்று பங்குச் சந்தைகளில், நேற்று போலவே எல்லா பிரிவு பங்குகளின் விலைகளிலும் அடிக்கடி மாற்றங்கள் இருக்கும். காலை வர்த்தகத்தில் தகவல் தொழில் நுட்பம், மின் உற்பத்தி, ரியல் எஸ்டேட், உலோக உற்பத்தி, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு குறியீட்டு எண்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்து இருந்தன.