சென்னை: தேங்காய் எண்ணெய் ரூ.192 உயர்வு!
புதன், 17 செப்டம்பர் 2008 (13:42 IST)
சென்னையில் இன்று எண்ணெய் சந்தையில் எண்ணெய் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டது. தேங்காய் எண்ணெய் நேற்று 15 கிலோவுக்கு 215 ரூபாய் குறைந்தது. இன்று 15 கிலோவுக்கு ரூ.192 உயர்ந்தது.
கடலை எண்ணெய் 100 கிலோவுக்கு ரூ.100ம், வனஸ்பதி 15 கிலோவுக்கு ரூ.5ம் குறைந்துள்ளது. கடலை பயிறு 80 கிலோவுக்கு ரூ.50ம், கடலை பிண்ணாக்கு 70 கிலோவுக்கு ரூ.10ம் குறைந்துள்ளது. மற்ற பொருட்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.
சந்தையில் விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலை நிலவரம்:
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,530 ( நேற்று ரூ.1,530)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,300 (ரூ.6,400)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.8,100 (ரூ.8,100)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,450 (ரூ.9,450)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,260 (ரூ.1,068)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,020 (ரூ.1,025)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,650/2,700 (ரூ.2,700/2,750)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,250 (ரூ.1,260)