பங்குச் சந்தையில் கடும் சரிவு!

தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் சரிந்தன.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைக‌ளிலு‌ம் இன்று காலையில் கடுமையாக பாதிக்கப்பட்டன.

நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தாலும், ஐரோப்பிய சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன.

காலை 10.30 மணிக்கு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 147.02 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,515.59 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 51.80 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4348.45 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 4.96, சுமால் கேப் 0.99, பி.எஸ்.இ. 500- 38.39 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் ஜூனியர் பிரிவு மட்டும் அதிகரித்து இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.35 மணியளவில் 776 பங்குகளின் விலைகள் அதிகரித்தது. 948 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 71 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய செலாவணி சந்தையில் நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிக அளவு குறைந்தது. கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவிற்கு ரூபாயின் மதிப்பு குறைந்தது. நேற்று இறுதியில் 1 டாலரின் மதிப்பு ரூ. 45.12/ 45.13 ஆக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 11% சரிவு.

சென்ற வருடம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12% அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இன்று காலையில் அந்நியச் செலாவணி சந்தை தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.45.41 ஆக அதிகரித்தது. அந்நியச் முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்வதால், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது.

அத்துடன் பெட்ரோலிய நிறுவனங்கள், தொழில், வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவு டாலரை வாங்குகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்