தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் உயர்ந்தன.
ஆசிய சந்தைகளில் பாதகமான நிலை இருந்தாலும், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 4 டாலர் குறைந்திருப்பது ஆறுதலான செய்தியாக உள்ளது. இதன் விலை நேற்று 110 டாலராக குறைந்தது.
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று குறியீட்டு எண்கள் அதிகரித்தாலும், பங்குகளின் விலைகளில் அடிக்கடி மாறுதல் இருக்கும் என்று தெரிகிறது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.26 மணியளவில் 1108 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 490 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 42 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
காலை 10.30 மணிக்கு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 139.23 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,637.74 ஆக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 36.95 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4385.60 ஆக அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 48.76, சுமால் கேப் 43.80 பி.எஸ்.இ. 500- 52.71 புள்ளி அதிகரித்தது.
இன்று காலை நடந்த வர்த்தகத்தில் எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.1,299.92 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,541.77 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இவை வெள்ளிக் கிழமை ரூ.241.85 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.532.82 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.450.20 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இவை நேற்று ரூ.82.62 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
செப்டம்பர் மாதம் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 241.85 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.69,463.97 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.48,259.65 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
ஐரோப்பாவில் நேற்று பெல்ஜியம் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் குறைந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-33.80 புள்ளி குறைந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று விடுமுறை.
இன்று ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸ் தவிர எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன.
சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 7.54, சீனாவின் சாங்காய் காம்போசிட் 16.48, ஜப்பானின் நிக்கி 23.18, ஹாங்காங்கின் ஹாங்செங் 145.05, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 6.41, தைவான் வெயிட் 77.72, புள்ளி அதிகரித்தது.
பிலிப்பைன்சின் பி.எஸ்.இ காம்போசிட் 21.73 புள்ளி அதிகரித்தது.