அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 17 பைசா சரிந்தது.
அன்னியச் செலாவணி சந்தை வெள்ளியன்று நிறைவடையும் போது ரூ.43.93 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது ரூ.44.10 ஆக சரிந்தது.
டாலர் மதிப்பு குறையாமல் இருக்க பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் டாலர்களை அதிகமாக வாங்கியதால் டாலர் மதிப்பு ரூ.44.10இல் இருந்து ரூ.44.24 இடையில் காணப்பட்டது.