சென்செக்ஸ் 79 – நிஃப்டி 38 புள்ளி சரிவு!

திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (18:34 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் சரிந்தன. இன்று நாள் முழுவதும் எல்லா பிரிவு பங்குகளின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 78.52 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,645.66 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 37.65 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4393.05 ஆக சரிந்தது.

ஐரோப்பாவில் ஆஸ்திரியா தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன. மாலை 5.00 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 33.20 புள்ளி அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 930 பங்குகளின் விலை அதிகரித்தது. 1668 பங்குகளின் விலை குறைந்தது. 78 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 41.62, சுமால் கேப் பிரிவு 73.83, பி.எஸ்.இ 100- 63.82, பி.எஸ்.இ 200- 14.76 பி.எஸ்.இ-500 46.99 புள்ளி குறைந்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள், உலோக உற்பத்தி, மின் உற்பத்தி, வாகன உற்பத்தி பிரிவு குறியீட்டு எண் அதிக அளவு குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 93, பாங்க் நிஃப்டி 15 சி.என்.எக்ஸ்.100-38.50, சி.என்.எக்ஸ். டிப்டி 61.60 சி.என்.எக்ஸ் 500- 32 சி.என்.எக்ஸ்.மிட் கேப் 77.15 மிட் கேப் 50- 26.75 புள்ளி குறைந்தது. சி.என்.எக்ஸ். ஐ.டி மட்டும் 15.05 புள்ளி அதிகரித்தது.

நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் ஹெச்.டி.எப்.சி 3.29%, டாக்டர் ரெட்டி 2.49%, ஹெச்.டி.எப்.சி வங்கி 2.45%, எல் அண்ட் டி 1.27%, ஜூ டெலிபிலிம் 1.21% ஹீரோ ஹோன்டா 1.01% உயர்ந்தது.

டி.எல்.எப் கெயில் 5.56%, அம்புஜா சிமென்ட் 5.32%, ஹின்டால்கே 4.71%, கிரேசம் 4.68%, ஏ.பி.பி 3.36% விலை குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்