சென்செக்ஸ் 165, நிஃப்டி 43 புள்ளி சரிவு!

வியாழன், 24 ஜூலை 2008 (17:02 IST)
மும்பை தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள். சுமார் 10.40 மணி அளவில் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட குறைய துவங்கின.

நேற்று புத்துணர்ச்சி அடைந்த பங்குச் சந்தை இன்று மீண்டும் பழைய நிலைக்கே திரும்பியது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 165.27 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 14,777.01 ஆக குறைந்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சுவிட்சார்லாந்து தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன. இந்திய நேரப்படி மாலை 4.40 மணியளவில் பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ.100- 33.70 புள்ளிகள் குறைந்தது.

அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 43.25 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4433.55 ஆக குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,258 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,458 பங்குகளின் விலை குறைந்தது, 67 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 35.04, சுமால் கேப் 16.53, பி.எஸ்.இ100- 77.86, பி.எஸ்.இ. 200-17.46, பி.எஸ்.இ.-500 51.08 புள்ளிகள் குறைந்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி, மின் உற்பத்தி, உலோக உற்பத்தி, நுகர்வோர் பொருட்கள், குறியீட்டு எண்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்தன.

அதே நேரத்தில் பெட்ரோலிய நிறுவனங்கங்களின் பிரிவு அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 52.95, சி.என்.எக்ஸ். ஐ.டி. 117.65, பாங்க் நிஃப்டி 129.55, சி.என்.எக்ஸ்.100- 39.30, சி.என்.எக்ஸ். டிப்டி 28.55, சி.என்.எக்ஸ். 500- 26.30, சி.என்.எக்ஸ். மிட் கேப் 14.75 புள்ளிகள் குறைந்தது. ஆனால் மிட் கேப் 50- 11.95 புள்ளிகள் அதிகரித்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் ஹெச்.எம்.டி. லிமிடெட் பங்கு விலை 19.34% , ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் 17.10%, இன்ஜினியர்ஸ் இந்தியா 14.43%, யுனைடெட் பீவரிஸ் 14.34%, பீனிக்ஸ் மில் 14.06%, நாகர்ஜுனா பெர்டிலைசர்ஸ் 13.80% அதிகரித்து.

டாடா பவர் பங்கு விலை 6.91%, டி.சி.எஸ் 6.49%, ஜின்டால் ஸ்டீல் 6.11%, டெக் மகேந்திரா 6.23%,யெஸ் பாங்க் 5.82% குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்