பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்

வெள்ளி, 18 ஜூலை 2008 (17:18 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. ஆனால் வர்த்தகம் தொடங்கிய பிறகு எல்லா பிரிவுகளும் ஏற்ற இறக்கமாக இருந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலை வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 71 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 13,183.28 ஆகவும், நிஃப்டி 2 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 3945.26 ஆக இருந்தது.

வங்கி, ரியல் எஸ்டேட் பிரிவு அதிகரித்தது. ஆனால் தகவல் உலோக உற்பத்தி பிரிவு பாதிக்கப்பட்டன.

பணவீக்கம் அளவில் அதிக வேறுபாடு இல்லாததால், இதன் தாக்கம் அதிக அளவு இல்லை. இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டு இலாப-நஷ்ட கணக்குகளை நிறுவனங்கள் அறிவிக்கின்றன. இதனை பொறுத்து பங்குச் சந்தைகளிலும் மாற்றம் இருக்கலாம். அத்துடன் வாரத்தின் இறுதி நாளாக இருப்பதால், முதலீட்டு நிறுவனங்கள் இலாப கணக்கு பார்க்க துவங்கலாம். இதனால் இன்று அதிக ஏற்ற இறக்கமாக இருக்க வாய்ப்புண்டு.

நேற்று அமெரிக்க, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் அதிகரித்தன.

இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது, சில ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைளில் குறியீட்டு எண் அதிகரித்தும். சிலவற்றில் குறைந்தும் இருந்தன. ஆனால் வர்த்தகம் தொடங்கிய பிறகு குறைய ஆரம்பித்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.45 மணி நிலவரப்படி 1040 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 784 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 65 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.35 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 63.81 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 13,175.66 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 6.10 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 3953.30 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 46.51 சுமால் கேப் 44.49 பி.எஸ்.இ. 500- 32.91 புள்ளி அதிகரித்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,774.51 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,464.06 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.310.45 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 996.16 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.828.14 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.168.02 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 3,972.05 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.63,134.05 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பாவில் நேற்று எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 135.70 புள்ளி அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 207.38, நாஸ்டாக் 16 புள்ளி அதிகரித்தது. எஸ் அண்ட் பி500- பிரிவில் மாற்றம் இல்லை.

இன்று ஆசிய நாடுகளின் எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 16.67 ஜப்பானின் நிக்கி 124.58 ஹாங்காங்கின் ஹாங்சாங் 25.20 சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 28.56 சீனாவின் சாங்காய் காம்போசிட் 15.59 புள்ளி குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்