முன்பேர சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

திங்கள், 14 ஜூலை 2008 (20:59 IST)
அயல் நாடுகளில் இருந்து வந்த தகவலால், இன்று காலை முன்பேர சந்தையான மல்டி கமோடிட்டி எக்சேஞ்சில் கச்சா எண்ணெய் விலை 0.30 விழுக்காடு அதிகரித்தது.

இன்று காலை மல்டி கமோடிட்டி எக்சேஞ்சில் 12.30 மணியளவில் செப்டம்பர் மாதத்திற்கான கச்சா எண்ணெய் விலை 0.30% அதிகரித்து 1 பீப்பாய் ரூ.6,225 ஆக உயர்ந்தது. ஜூலை மாதத்திற்கான விலை 0.27% உயர்ந்து 1 பீப்பாய் ரூ.6,216 ஆக அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்