சென்செக்ஸ் 38 புள்ளிகள் குறைந்தது!

வியாழன், 10 ஜூலை 2008 (18:17 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன. காலசுமார் 11 மணி வரை குறியீட்டு எண்கள் அதிகரித்தன. அதற்கு பின் குறைய துவங்கின. காலை முதல் மாலை வரை ஏற்ற இறக்கமாக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 38.02 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 13,926.24 ஆக குறைந்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் பாதகமான போக்கு நிலவியது. மாலை 4.55 மணி நிலவரப்படி பிரிட்டனில் எப்.டி.எஸ்.இ.-100 86.30 புள்ளி குறைந்தது.

அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5.10 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4,162.20 ஆக அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,453 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,171 பங்குகளின் விலை குறைந்தது, 73 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 4.52, சுமால் கேப் 19.36 அதிகரித்தன. ஆனால் பி.எஸ்.இ. 500- 0.61 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 8.30 சி.என்.எக்ஸ். ஐ.டி 29.55 பாங்க் நிஃப்டி 2.45 மிட் கேப் 50- 7.35 புள்ளி குறைந்தது.

சி.என்.எக்ஸ்.100- 3.50 சி.என்.எக்ஸ். டிப்டி 6.05 சி.என்.எக்ஸ். 500- 2.25 சி.என்.எக்ஸ். மிட் கேப் 3.10 புள்ளி அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்