மும்பை: தங்கம் வெள்ளி விலை உயர்வு!

வியாழன், 10 ஜூலை 2008 (16:45 IST)
மும்பையிலதங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.

இன்று காலை பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.205 அதிகரித்தது. இதே போல் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.130 உயர்ந்தது.

தங்க நகை தயாரிப்பாளர்கள் அதிக அளவு தங்கம் வாங்கியதால் விலை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,045
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,980
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,195

வெப்துனியாவைப் படிக்கவும்