மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், பத்தரை மணியளவில் குறைய துவங்கின.
இன்று காலை ஆசிய பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண்கள் குறைந்தும், சிலவற்றில் அதிகரித்தும் இருந்தன. இன்று இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றைய நிலவரம் போலவே, எல்லா பங்குகளின் குறியீட்டு எண்களும் குறைந்து வருகின்றன.
பங்குச் சந்தையின் போக்கு நேற்றைய நிலவரம் போலவே இருக்கும். ஐரோப்பிய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய பிறகு, இந்திய பங்குச் சந்தைகளில் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 430 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1,824 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 40 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 58.70 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 12,902.98 ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 25.50 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 3871.25 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 133.50, சுமால் கேப் 169.29, பி.எஸ்.இ. 500- 70.64 புள்ளி குறைந்தது.
நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,117.64 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,908.21 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.209.43 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.785.18 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.622.66 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.162.50 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 209.43 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.58,952.57 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று எல்லா நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண் குறைந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-146 புள்ளி குறைந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 32.25, நாஸ்டாக் 11.99, எஸ்.அண்ட்.பி-500 4.91 புள்ளி அதிகரித்தது.
இன்று காலை 10.25 மணியளவில், ஆசிய நாடுகளில் சீனா, சிங்கப்பூர் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. மற்றவைகளில் குறைந்து இருந்தது.
தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 43.91, ஹாங்காங்கின் ஹாங்சாங் 359.90, ஜப்பானின் நிக்கி 147.91 புள்ளி குறைந்தது.
சீனாவின் சாங்காய் காம்போசிட் 41.82, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 17.78, புள்ளி அதிகரித்தது.