சென்செக்ஸ் 99 புள்ளிகள் உயர்வு!

வெள்ளி, 30 மே 2008 (18:34 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் காலையில் இருந்து அதிக மாற்றத்துடன் இருந்த குறியீட்டு எண்கள், இறுதியில் அதிகரித்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, சீனா தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்து இருந்தன. மாலையில் சீனா உட்பட எல்லா நாட்டு பங்குச் சந்தைகளும் உயர்நதன.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய பிறகு தொடங்கும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையில் எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ.-10.10 புள்ளி அதிகரித்தது.

உலக அளவில் பங்குச் சந்தையில் உயர்வு இருந்த அதே நேரத்தில் பண்டகச் சந்தையில் விலை குறைந்தது. குறிப்பாக தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது. அதேபோல் முன் பேர சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணய் விலையும் சிறிது குறைந்தது.

இன்று மாலை வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் 99 புள்ளிகளும், நிஃப்டி 35 புள்ளி அதிகரித்தன.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 99.31 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,415.57 ஆக அதிகரித்தது.


மாலை வர்த்தகம் முடிந்த போது தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 34.80 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4,870.10 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,008 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,701 பங்குகளின் விலை குறைந்தது, 58 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 18.78, பி.எஸ்.இ. 100-34.54, பி.எஸ்.இ. 200-8.20 புள்ளி அதிகரித்தது.

ஆனால் சுமால் கேப் 48.03, பி.எஸ்.இ. 500- 2.36 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 10.65, சி.என்.எக்ஸ். ஐ.டி 100.10, பாங்க் நிஃப்டி 7.60, சி.என்.எக்ஸ்.100- 29.60, சி.என்.எக்ஸ். டிப்டி 63.30, சி.என்.எக்ஸ். 500- 20.25, சி.என்.எக்ஸ். மிட் கேப் 0.80, மிட் கேப் 50- 2.40 புள்ளி அதிகரித்தது.

நேற்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.4,242.32 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.5,519.95 மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2.033.12 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,335.12 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.46,601.23 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நுகர்வோர் பொருட்கள் பிரிவு 323.61, உலோக உற்பத்தி பிரிவு 235.18, தகவல் தொழில் நுட்ப பிரிவு 96.03 புள்ளி அதிகரித்தன.

அதே நேரத்தில் வங்கி பிரிவு 4.22, வாகன உற்பத்தி பிரிவு 55.05, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 32.86, ரியல் எஸ்டேட் 108.29, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 174.57, மின் உற்பத்தி பிரிவு 112.60 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 29 பங்குகளின் விலை அதிகரித்தது, 21 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 22 பங்குகளின் விலை அதிகரித்தது, 26 பங்குகளின் விலை குறைந்தது, 2 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

சி.என்.எக்ஸ். ஐ.டி. பிரிவில் உள்ள 20 பங்குகளில் 10 பங்குகளின் விலை அதிகரித்தது, 10 பங்குகளின் விலை குறைந்தது.

பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 5 பங்கின் விலை அதிகரித்தது, 7 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 22 பங்குகளின் விலை அதிகரித்தது, 28 பங்குகளின் விலை குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்