மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.130ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.100ம் குறைந்தது.
லண்டன் மற்றும் ஆசிய நாட்டு சந்தைகளில் இருந்து வந்த தகவலாலும், உள்நாட்டில் வியாபாரிகள் வாங்குவதில் ஆர்வம் காண்பிக்காத காரணத்தினாலும் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 920.30/ 921.10 டாலராக குறைந்தது. இதே போல் பார் வெள்ளியின் விலை 1 அவுனஸ் 18.02/ 18.06 டாலராக குறைந்தது.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,815 22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,755 பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,945