காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. சென்செக்ஸ் 132.10, நிஃப்டி 49 புள்ளிகள் அதிகரித்தது.
இந்திய பங்குச் சந்தையில் மட்டுமல்லாமல் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் உயர்ந்தன. அமெரிக்க பங்குச் சந்தையிலும் அதிகரித்தது. ஆனால் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் ஏற்ற இறக்கத்துடன் உள்ளன.
சென்ற வாரத்தில் இதுவரை இல்லாத அளவு பணவீக்கம் 7.03 விழுக்காடாக அதிகரித்தது. அத்துடன் தொழில் துறை உற்பத்தியும் குறைந்ததாக அதிகார புள்ளி விபரங்கள் தெரிவித்தன. இந்த வாரம் பணவீக்கம் பற்றிய தகவல் இன்று வெளியிடப்பட உள்ளது. அத்துடன் நேற்று உருக்கு, இரும்பு பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றின் தாக்கம் பங்குச் சந்தையில் இருக்கும், இதனால் பங்குச் சந்தையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 94.03 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 15,789.13 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 30.00 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4763.30 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 48.61, பி.எஸ்.இ. 500- 45.60, சுமால் கேப் 44.97 புள்ளிகள் அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் 1294 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 655 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 47 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு பங்குகளின் விலைகள் மாறுவதால் குறியீட்டு எண்களும் அடிக்கடி மாற்றம் அடைகின்றன.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 54.72, எஸ்.அண்ட் பி 500-6.06, நாஸ்டாக் 29.58 புள்ளி அதிகரித்தது.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 12.92, ஹாங்காங்கின் ஹாங்செங் 249.47, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 28.24, ஜப்பானின் நிக்கி 338.76, சீனாவின் சாங்காய் காம்போசிட் 133.80 புள்ளி அதிகரித்து இருந்தது.